“விஜய்யை நிறுத்த வாழ்நாள் எதிரிகள் ஒன்றிணைகிறார்கள்.. யார் துரோகி..? மாணிக்கம் தாகூர் சாடல்..

manickam tagore

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..


எனினும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. இதற்காக தவெக சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.. தவெகவின் நிர்வாகிகள் நேரடியாகவும் சென்று ஆதரவு கோரினர்.. இதுகுறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றன.. எனினும் எந்த முடிவு ஏற்படாமல் உள்ளது..

இதனிடையே திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.. ஆனால் கூட்டணி ஒருபோதும் கிடையாது என்று அதிமுகவும், திமுகவும் உறுதியாக கூறிவிட்டன.. இந்த சூழலில் அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு கொடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது..

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ” இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது. RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது. “நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? யார் துரோகி..” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி... விஜய்க்கு ஆதரவா..? திருமா பரபரப்பு பதில்..!

Fri May 8 , 2026
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், […]
vijay thiruma 1

You May Like