பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். மாலத்தீவிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இன்றைய தினம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தேவார திருவாசக பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து இளையராஜாவின் இசையில் ஒலித்த சிவபக்தி பாடல்களை கேட்டு பரவசமடைந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் ஆன்மிக அனுபவம் தனது ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டதாகவும் பேசினார்.
‘வணக்கம் சோழமண்டலம்’ எனக்கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி “சகோதர, சகோதரிகளே! நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். எப்போதெல்லாம், நயினார் நாகேந்திரனின் பெயர், கூறப்படுகிறதோ? உங்களிடத்திலே, ஒரு உற்சாக கொப்பளிப்பை, நான் கவனித்து விட்டேன். இது ராஜராஜ சோழனின் இடம். இந்த இடத்திலே, அவையிலே, என்னுடைய சஹாவான, இளையராஜாவின், சிவபக்தி. இந்த மழைக்காலத்திலே, இது மிகவும் சுவாரசியமாக, பக்தி நிரம்பியதாக இருந்தது.
நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர். இங்கே, இந்த, சிவ கோஷத்தை கேட்கும்போது, எனக்கு உள்ளுக்குள்ளே, மிகவும் பரவசமாக இருக்கின்றது.” என்றார். தமிழ்நாட்டின் செங்கோள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதை பெருமையாக உணர்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து களவாடப்பட்ட 600க்கும் மேற்பட்ட சிலைகள் பல நாடுகளில் இருந்து மீட்டுள்ளோம்.
சோழர்களின் ஆட்சி காலத்தில் நாடு வேகமாக முன்னேறியது. உள்ளூர் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர் சோழர்கள். அன்பே சிவம் என்ற திருமூலரின் கோட்பாட்டை உலகம் முழுவது கடைப்பிடித்தால் சங்கடங்கள் அனைத்தும் தீரும். நிலவின் தென் துருவத்தில் முதலில் கால் பதித்த நாடு இந்தியா.. இனி எந்த நாடு அந்த பகுதியை அடைந்தாலும் சிவசக்தி