கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்திற்குள் புகுந்து, அங்கு பணியாற்றி வந்த 23 வயது இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தித் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி காமராஜர் நகர் பகுதியில் அரசு சார்பில் ‘முதல்வர் மருந்தகம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா (23) என்ற இளம்பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாளராக வேலை பார்த்து […]

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் 17-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஏசுதாஸ் (50). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இவர் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த யோகேஷ் என்பவர் “காட்டான் ராஜ் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார்” எனக் கூறி அவரை வீட்டின் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு […]

திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (40). மகளிர் சுயஉதவிக் குழு தலைவியான இவருக்கு, முதல் கணவர் இறந்த பிறகு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டரான விஜயபாலன் (42) என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையான விஜயபாலன் தொடர்ந்து […]

கடலூரில் சாலையோர வீட்டு வாசலில் படுத்துறங்கிய 70 வயது மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்தது கவரிங் நகை என தெரிந்ததும் உடலை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா (70) என்ற மூதாட்டி, கடந்த சில ஆண்டுகளாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள நகைக்கடைகளின் வெளியே சாலையை சுத்தம் செய்யும் […]

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அவரது சித்தப்பாவை, காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த மாணவி, தேவகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று கொண்டு தனது பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளார். அதே வீட்டில் மாணவியின் சித்தி மற்றும் சித்தப்பாவான […]

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் வயல்வெளிப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.. வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி காணாமல் போன சிறுமி, மறுநாள் மே 23ஆம் தேதி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் […]