தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவை தேர்தல் பணிகளை மாவட்ட வாரியாக மேற்கொண்டு வருகிறது.
அதிமுகவை எடுத்து கொண்டால் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளனர். ‛மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர அனுதினமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, அதற்கு ஸ்டாலின் தான் சேர்மன் என விமர்சித்தார். தமிழகத்தை ஆள நினைக்கும் உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பினார். திமுகவில் இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவிக்கு வரமுடியும் என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜயபாஸ்கர் கூட முதல்வர் ஆகலாம் என கூறியுள்ளார்.
Read more: மாணவன் மீது 38 வயது பெண்ணிற்கு வந்த விபரீத ஆசை.. 2 மாதமா லிவிங் டுகெதர் வேற..!! விசாரணையில் பகீர்..