தோற்றால் தூக்கிலிடுவார்கள்..! உக்ரைன் போரால் புதினுக்கு வந்த புது சிக்கல்..! சொந்த நாட்டிலேயே இப்படியா..?

Russia Putin 2026

உக்ரைன் மீதான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உள்நாட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


பிரபல சர்வதேச இதழான The Economist மற்றும் புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உக்ரைன் போரில் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாமல் பின்வாங்கினால், அது புதினின் சொந்த அரசியல் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

“இந்தப் போரில் தோற்றால் உள்நாட்டு எதிர்ப்பாளர்களாலும், ராணுவத் தீவிர ஆதரவாளர்களாலும் என்னை தூக்கிலிடுவார்கள்” என்ற அளவுக்கு நிலைமை தீவிரமாக இருப்பதாகவும், இதனால் தான் உக்ரைன் அல்லது நேட்டோ நாடுகளுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல், எப்பாடு பட்டாவது போரை முன்னெடுத்துச் செல்லும் கட்டாயத்திற்கு புதின் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் ஏற்படும் பின்னடைவுகள் மற்றும் பொருளாதார தடைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கவும், தன் மீதான பிடியை தளர்த்தாமல் இருக்கவும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

Read More : பிரிட்ஜில் இருந்த மனைவியின் தலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி கணவர் செய்த கொடூரம்!

Next Post

சட்டசபையில் நான் செய்தது..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்..!! பரபரப்பு அறிக்கை..!!

Tue Sep 8 , 2026
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது தான் வெளிப்படுத்திய உடல்மொழி முற்றிலும் எதேச்சையானது என்றும், எந்தவொரு தனிநபரின் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரையாற்றினார். அப்போது, கடந்த கால திமுக ஆட்சி மற்றும் சர்க்காரியா ஆணைய விவகாரங்களை […]
CM Vijay 2026 1

You May Like