இந்த தேர்தலில் ரீ-டேக் வருமா..? விஜய் ஆண்டனி சொன்ன நச் பதில்.. ஆடிப்போன திமுக..!

Vijay Antony 2025

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று அரசாங்கத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான நாள். நான் வெளியூரிலிருந்து வந்ததால் வாக்கு செலுத்த தாமதமானது. ஆனால் இந்த முறை அதிக அளவில் பொதுமக்கள் வந்து வாக்களிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.


மேலும், கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். “வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் விழிப்புணர்வே. கல்வி பெற்றவர்கள் அதிகரித்துள்ளதால், வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியலில் ரீ-டேக் எடுக்கலாம். ஆனால் எந்த துறையிலும் எதுவும் எளிதல்ல” என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, “இந்த தேர்தலில் ரீ-டேக் வருமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு நேரடி பதிலைத் தவிர்த்த அவர், “வராது சார்… யாராவது ஒருவர் வந்து தானே ஆக வேண்டும். என் வாயிலிருந்து எதையும் வர வைக்காதீர்கள்” என்று நகைச்சுவையாகவும், சாதுர்யமாகவும் பதிலளித்தார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் ஆதரவாளர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர், அவர் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் என கூற, மற்றவர்கள் அது ஒரு பொதுவான பதிலாகவே பார்க்கப்படுகிறது என வாதிடுகின்றனர்.

Read more: 4 வயது குழந்தைக்கு டியூஷன் எடுக்க 2 கோடி சம்பளம்.. இணையத்தில் வைரலாகும் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

English Summary

Will there be a re-take in this election? Vijay Antony’s answer… DMK has gone wild..!

Next Post

ஆதார் பயனர்களுக்கு எச்சரிக்கை..! இந்த 3 விஷயங்களை செய்தால், உங்கள் கார்டு பாதுகாப்பாக இருக்கும்..!

Fri Apr 24 , 2026
ஆதார் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும். எனவே, அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். சமீபகாலமாக, இந்த அட்டையின் வாயிலாக நடைபெறும் முறைகேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர், கைரேகைகளைச் சேகரித்து அவற்றை நகலெடுப்பதன் (cloning) மூலம் குற்றங்களை இழைத்து வருகின்றனர். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கசிந்தால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க […]
aadhar update

You May Like