நமது இல்லங்களில் பொருட்களை வைக்கும் விதம் மற்றும் அவற்றை பராமரிக்கும் முறையை பொறுத்தே வீட்டை சுற்றி நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகள் உருவாகின்றன. குறிப்பாக, பணத்தையும் விலைமதிப்பற்ற பொருட்களையும் பாதுகாப்பாக வைக்கும் பீரோவை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வாஸ்து மற்றும் ஆன்மீக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், வீட்டில் செல்வம் தங்குவதற்கும் லட்சுமி கடாட்சம் பெருகவதற்கும் பீரோவில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து காண்போம்.
இறந்தவர்களின் புகைப்படங்கள் :
நாம் தினமும் பயன்படுத்தும் பண பீரோவில் முன்னோர்கள் அல்லது மறைந்தவர்களின் புகைப்படங்களை வைக்கக்கூடாது. பயன்படுத்தாத தனியான பீரோவில் இவற்றை வைத்துக்கொள்ளலாம். அதேபோல், எதிர்பாராத வகையில் அகால மரணம் அடைந்தவர்களின் உடமைகள் மற்றும் நகைகளை நாம் அன்றாடம் அணியும் நகைகளோடு சேர்த்து வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் கால பொருட்கள் :
பணம் வைக்கும் பீரோவில் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களை ஒருபோதும் வைக்கக்கூடாது. மேலும், பீரோவின் கதவுகளை எப்போதும் திறந்து வைக்கும் பழக்கம் கூடாது. இதனால் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றல்கள் வெளியேறி, பணப்புழக்கம் குறையும் சூழல் உருவாகும்.
உடைந்த பொருட்கள் :
செயலிழந்த அல்லது ஓடாத கைக்கடிகாரங்கள், உடைந்த கண்ணாடிகள் மற்றும் உடைந்த தங்க நகைகளை நல்ல நகைகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. இவை எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து, தேவையற்ற மருத்துவ செலவுகளையும் பண விரயத்தையும் ஏற்படுத்தும்.
பீரோவை எப்போதும் சுத்தமாகவும், வாசனை திரவியங்கள் அல்லது பச்சை கற்பூரம் வைத்தும் பராமரிப்பது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைநிறுத்த உதவும்.
Read More : இனி வெறும் ரூ. 12 மட்டும் தான்..!! ஆவின் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி..!!



