பெரும் சோகம்..!! பிரபல தமிழ் நடிகர் விஸ்வேஸ்வர ராவ் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

நடிகர் விஸ்வேஸ்வர ராவ், திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதிலும் விஸ்வேஷ்வர ராவ் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிகை லைலாவின் அப்பாவாக நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற இவர், இன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62. இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.

விஷ்வேஸ்வர ரா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை கேரக்டராகவும், குணசித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அவர் 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டாராம். அதிலும் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 150 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : மதுபான கொள்கை முறைகேடு..!! 6 மாதங்களுக்கு பிறகு எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்..!!

Chella

Next Post

’படம் பிடிக்கவில்லை என்றால் செருப்பால் அடிங்க’..!! ஹாட்ஸ்பாட் திரைப்பட இயக்குநர் வேதனை..!!

Tue Apr 2 , 2024
திட்டம் இரண்டு, அடியே படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இவர், சமீபத்தில் இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆண் – பெண் உறவு மற்றும் சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரைப் பெற்றது. […]

You May Like