ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை…! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…!

school 2025 2

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர் மீது பெறப்படும் புகார் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாகப் பராமரிக்கப்படுவது அவசியம்.

மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்’ குழு திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்துவது தெரிய வந்தால், அதை பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

உட்டா கல்லூரி நிகழ்வில் துப்பாக்கிச்சூடு!. டிரம்பின் நெருங்கிய கூட்டாளி பலி!. நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு!.

Thu Sep 11 , 2025
உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ​​பழமைவாத ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். இளம் குடியரசுக் கட்சி வாக்காளர்களை அணிதிரட்டுவதில் செல்வாக்கு மிக்க பங்காற்றிய கிர்க், கல்லூரி நிகழ்வின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் […]
Charlie Kirk dies

You May Like