அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு…!

tn school 2025

நடப்பு கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25 ஆம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே அவர்கள் உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்ய இயலும். இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மாற்றப்பட்டனர். அதனுடன், கூடுதலாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியிலிருந்து பணி மாறுதல், பணி நிறைவு பெற்று இருப்பின் அல்லது 3 ஆண்டுகளாக உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணியாற்றி, இந்த கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விலக விரும்பும் ஆசிரியருக்குப் பதிலாக பள்ளியில் பணியாற்றும் தகுதியுள்ள மற்றொரு ஆசிரியரை புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும். அதன்படி 250 மாணவர்களுக்கு ஓர் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் என்ற விகிதத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்து ஜூன் 25 ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். தொடர்ந்து அதனை எமிஸ் தளத்தில் புதுப்பிக்க வேண்டும்.

மேலும் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் எமிஸ் தளத்தில் பதிவு செய்வதன் வாயிலாக மட்டுமே நடப்பு கல்வியாண்டில் நடக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியின்போது வருகைப்பதிவு மற்றும் மதிப்பீட்டுத் தேர்வினை மேற்கொள்ள இயலும். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தக்க வழிகாட்டுதல்கள் வழங்கி அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: முக்கிய அறிவிப்பு…! பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை…!

Vignesh

Next Post

செக்..! இனி கற்கள், ஜல்லி & எம்.சாண்ட் எடுத்து செல்ல அனுமதிச்சீட்டு கட்டாயம்...!

Sun Jun 15 , 2025
கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றிற்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணையவழியில் Bulk permit வழங்கும் நடைமுறை ஜூன்-2024 முதலும் மற்றும் e-permit வழங்கும் நடைமுறை ஏப்ரல்-2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் […]
cement 2025

You May Like