பெருமாள் சன்னதியில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய முறைகள்..!! இதுதான் முழுமையான பலன் தரும்..!!

Perumal Temple 2025

வைணவ திருத்தலங்களுக்கு சென்று வழிபடும்போது ஆகம விதிகளின்படி சரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது மன அமைதியையும், முழுமையான இறையருளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பெருமாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், கோயில் வாசலிலேயே தங்களது காலணிகளை கழற்றிவிட்டு, ராஜகோபுரத்தை தலைநிமிர்ந்து நோக்கி, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி கோபுரக் கலசங்களை மனமுருக வணங்க வேண்டும். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பதற்கேற்ப, கோபுரத்தை வணங்கிய பிறகே கோயிலின் உள்பிரகாரத்திற்குள் நுழைய வேண்டும்.


கோயிலுக்குள் சென்றதும், பலிபீடம் அல்லது கொடிமரத்தின் அருகில்தான் கீழே விழுந்து வணங்க வேண்டும் (ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்). உள் சன்னதிக்குள் எக்காரணம் கொண்டும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது. பின்னர், விஷ்ணுவின் வாகனமும் முதன்மைப் பக்தருமான கருடாழ்வாரை தரிசித்து அவரது ஆசியைப் பெற வேண்டும். பின்னர், மூலஸ்தான நுழைவாயிலில் உள்ள ஜெயன், விஜயன் ஆகிய துவார பாலகர்களை வணங்கி, அவர்களின் அனுமதி பெற்று மூலவர் சன்னதியை நோக்கிச் செல்ல வேண்டும்.

கருவறைக்குள் பெருமாளை தரிசிக்கும்போது சத்தம் போட்டுப் பேசுவதை தவிர்த்து, அமைதியாக மௌனம் காக்க வேண்டும். இறைவனை தரிசிக்கும்போது பாதங்களிலிருந்து தொடங்கி மேல்நோக்கி திருமுகம், திருமுடி வரை கண்குளிரப் பார்த்து ரசித்து வழிபட வேண்டும். கொடிமரத்தை தாண்டி உள் சன்னதிக்குள் வந்த பிறகு கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிடக் கூடாது; கைகளை மார்பிலிருந்து மூக்கு நுனி வரையிலான இடைவெளியில் வைத்து மட்டுமே பயபக்தியுடன் வணங்க வேண்டும். மூலவருக்குக் காட்டப்படும் தீபாராதனையை கண்குளிர தரிசித்த பிறகு, அர்ச்சகர் வழங்கும் புனித தீர்த்தம், துளசி மற்றும் சடாரி (பெருமாளின் திருவடி) ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர், சன்னதியை நிதானமாக வலம் வந்து, மூலவரை தரிசித்த திருப்தியுடன் அமைதியாக வெளியேற வேண்டும். வைணவ மரபின்படி இத்தகைய முறையான வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பெருமாளை ஆராதிப்பது சகல தோஷங்களையும் நீக்கி, குடும்பத்தில் சுபிட்சத்தையும் அமைதியையும் நிலைநிறுத்தும் என்பது ஆன்றோர்களின் வாக்கு.

Read More : OTTஇல் வெளியாகிறது CM விஜய்யின் ஜனநாயகன்..!! தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்..!!

Next Post

கடன் வாங்கி கோயிலுக்குப் போகாதீங்க..!! என்ன காரணம் தெரியுமா..? ஆன்மிக சாஸ்திரம் சொல்வது என்ன..?

Thu Aug 20 , 2026
கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடும்போது சில முக்கியமான சாஸ்திர மற்றும் ஆகம விதிகளைக் கடைப்பிடிப்பது வழிபாட்டின் முழுமையான பலனையும், புண்ணியத்தையும் தரும் என்பது ஆன்றோர்களின் வாக்கு. இறைவனைத் தரிசிப்பதற்காக ஒருபோதும் பிறரிடம் கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கிச் சென்று செய்யும் வழிபாட்டின் மூலம் கிடைக்கும் முழுப் புண்ணியமும் கடன் கொடுத்தவரையே சென்றடையும் என்பதால், தங்களின் வசதிக்கும் சக்திக்கும் உட்பட்ட வகையிலேயே யாத்திரைகளையும் வழிபாடுகளையும் மேற்கொள்வது சிறந்தது எனக் கூறப்படுகிறது. […]
Money 2026

You May Like