கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. தமிழகத்தை குளிர்விக்க வரும் கோடை மழை..! வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்..

rain

கோடைக் காலம் தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன்வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 4ம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 5, 6ம் தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், ஏப்ரல் 6 வரை வெப்பத்தின் தாக்கம் குறையாது என்பதால் பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read more: ஏப்ரலில் அரிய திரிகிரக யோகம்..! இந்த 4 ராசிகளுக்கு ராஜபோக வாழ்வு கிடைக்கும்..!

English Summary

Important update from the Meteorological Department..

Next Post

உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? வேட்பு மனு விவரம் வெளியானது..!

Thu Apr 2 , 2026
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் […]
udhanithi stalin 1

You May Like