டெல்லியில் நேற்றிரவு பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 8 வயது குழந்தை உட்பட 5 பேர் மீது காரை ஏற்றிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில், அதிகாலை 1:45 மணியளவில், சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது ஆடி கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 வயது குழந்தை உட்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர். பலியான ஐந்து பேரும் ராஜஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் விபத்து நடந்த நேரத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
காரை ஓட்டிச் சென்றவர் டெல்லியின் துவாரகாவைச் சேர்ந்த 40 வயதுடைய உத்சவ் சேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாகனம் ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்ததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.
Read more: சரக்கு ரயில் தீ விபத்து: 8 விரைவு இரயில் உட்பட சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து..!!