மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர். இவரது மனைவி பெயர் மனிஷா (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில, பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த மனைவி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான பரமேஸ்வரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள அணையில் இருந்து ஆணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு, இறந்தவர் யார் என்ற விசாரணயை மேற்கொண்டனர். விசாரனையில் அது மாயமான பரமேஸ்வர் என்பது தெரியவந்தது. கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினார்கள்.
மனைவி மனுஷாவிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரது பதில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் நடத்திய கிடுக்குப்புடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது மனிஷாவுக்கும், கணவரின் இளைய சகோதரர் தியானேஸ்வர் என்பவருக்கும் இடையே கள்ள உறவு இருந்துள்ளது.
இந்த விஷயம் கணவருக்கு தெரியவரவே வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. இருவரும் சேர்ந்து பரமேஷ்வரனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதன்படி கடந்த மாதம் 15ம் தேதி இரவு தியானேஸ்வர், தன்னுடைய அண்ணனின் தலை மீது பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளார். உடனே மனிஷா ஒரு துணியால், கணவரின் கழுத்தை இறுக்கி நெரித்துள்ளார். இதில் பரமேஸ்வர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
பிறகு இருவரும், பரமேஸ்வரின் சடலத்தை கல்லை கட்டி அணையில் வீசியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, போலீசார் மனிஷாவையும், தியானேஸ்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மா இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..? சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து..!!



