விஷவாயு தாக்கி 2 பேர் பலியான விவகாரம்! கால்வாயில் இறங்க சொன்ன அதிகாரி யார்? வெளியான திடுக்கிடும் தகவல்!

Death 2026

சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் தென்றல் நகர் மூன்றாவது தெருவில், மழைநீர் வடிகால் கால்வாயில் இறங்கி பழுதான கழிவுநீர் மோட்டாரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி நவீன் மற்றும் பாஷா ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து நவீனின் குடும்பத்தினர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொழிலாளர்களை கால்வாய்க்குள் இறங்க உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள் யார், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் யார் என்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உறவினர்கள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்களிடம் விவரங்களை விவரிக்காமல் அவசர அவசரமாக முதல் தகவல் அறிக்கை தயாரித்து, அதில் கையெழுத்திடுமாறு போலீசார் கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் நடந்துள்ள பகுதி முதலமைச்சரின் தொகுதி எல்லைக்குட்பட்டது என்பதால், முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். உயிரிழந்த நவீனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருவதால் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Read More : தேர்தல் கமிஷனருக்கு எதிராக டெல்லியில் அடங்காத கொந்தளிப்பு! தடையை மீறி ஜந்தர் மந்தரில் புகுந்ததால் பரபரப்பு!

Next Post

தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடா?.. விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன?

Tue Oct 13 , 2026
தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படப்போகிறதா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் அரிசி வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அரிசி கிடைப்பதில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் வரத்து குறைந்திருப்பதே தற்போதைய விலை உயர்வுக்குக் காரணம் என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் அன்றாட […]
rice 11zon

You May Like