சுதந்திர தினம்..!! இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு ஒரே நாள் தான் வித்தியாசம்..!! எப்படி தெரியுமா..? சுவாரசிய பின்னணி..!!

India vs Pak 2026

ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கு பின்னால் பிரிட்டிஷ் சட்டம், வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயணத் திட்டம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.


உண்மையில், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘இந்திய சுதந்திர சட்டம்’, இரு நாடுகளும் உருவாவதற்கான அதிகாரப்பூர்வ நாளாக ஆகஸ்ட் 15-ஐயே நிர்ணயித்திருந்தது. எனினும், அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் இரு நாடுகளின் சுதந்திர நிகழ்வுகளிலும் நேரில் பங்கேற்க வேண்டிய நடைமுறைச் சூழல் எழுந்தது. பாகிஸ்தானின் அப்போதைய தலைநகரான கராச்சியில் ஆகஸ்ட் 14 அன்று அதிகாரப் பரிமாற்றத்தை முடித்த மவுண்ட்பேட்டன், பின்னர் டெல்லிக்கு வந்து ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் சுதந்திர நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

மவுண்ட்பேட்டனுக்கு இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த நாளான ஆகஸ்ட் 15 மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்ததும் இந்தியாவின் சுதந்திர தேதிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆரம்பத்தில் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15-ஐயே தனது சுதந்திர நாளாகக் கருதியது. அந்நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னாவின் முதல் உரையிலும், 1948-ல் வெளியான முதல் தபால் தலையிலும் ஆகஸ்ட் 15 என்ற தேதியே இடம்பெற்றிருந்தது.

ஆனால், தங்களுக்கு அதிகாரப் பரிமாற்றம் முழுமை அடைந்த நாளான ஆகஸ்ட் 14-ஆம் தேதியையே பின்னர் பாகிஸ்தான் தனது அதிகாரப்பூர்வ சுதந்திர தினமாக மாற்றிக் கொண்டது. அதேநேரம், ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையுடன் விடுதலை அடைந்த இந்தியா, தொடர்ந்து ஆகஸ்ட் 15-ஐயே சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. இரு நாடுகளின் விடுதலை என்பது புதிய அத்தியாயமாக அமைந்தாலும், அதன் பின்னணியில் நிகழ்ந்த தேசப் பிரிவினையும் வன்முறைகளும் வரலாற்றின் ஆறாத வடுக்களாக நிலைத்துவிட்டன.

Read More : “மானே.. தேனே.. பொன்மானே”..!! எதுக்கு இந்த இரட்டை வேடம்..? தவெக அரசை விளாசிய உதயநிதி..!!

Next Post

“சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம்”!. முதலமைச்சர் விஜய்!.

Sat Aug 15 , 2026
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மக்கள் அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்யிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்ட […]
cm vijay 30kb

You May Like