“சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட உறுதியேற்போம்”!. முதலமைச்சர் விஜய்!.

cm vijay 30kb

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மக்கள் அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெள்யிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை ஆதரியுங்கள்!. எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறைகூவல்!.

Sat Aug 15 , 2026
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இதனையடுத்து சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்றத்திலும் […]
pmmodiindepentencespeech

You May Like