“ 1 மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள்.. ஆனா அதிமுக எம்.எல்.ஏக்களை முதல்வர் Panic Buying செய்கிறார்.” உதயநிதி சாடல்..!

cm vijay udhaynidhi

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசின் ஆளுநர் உரையை கண்டிப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.. இன்றைய முதல்வர் தேர்தலுக்கு முன்பு என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.. பச்சை குழந்தைகள், மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீர வசனம் பேசினார்..


இன்றைக்கும் நடக்கும் அனைத்து குற்றங்களிலும் ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற குறிப்பும் ஆளுநர் உரையில் கிடையாது.. ஏற்கனவே நன்றாக இருக்கும் திட்டங்களை கெடுப்பதை எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது..

திமுக கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டனர்.. நான் முதல்வன் என்று சொன்னாலே மக்களுக்கு எங்கள் தலைவர் ஸ்டாலின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற குறுகிய எண்ணத்தில் அந்த திட்டத்தை மாற்றி உள்ளனர்..

எப்போதாவது பேசும் முதல்வர், தான் முதல்வர் என்பதை மறந்து இன்னும் பிரச்சாரம் செய்யும் மோடிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்.. அவர்களின் அமைச்சர்களும் ரீல்ஸ் வெறியில் சுற்றுகின்றனர்.. முதல்வர் விஜய் தனது ஆட்சியை காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏக்களை Panic Buying செய்து கொண்டிருக்கிறார்..

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பெண்கள் பாதுகாப்புக்கும் எந்த ஒரு திட்டமும் இந்த ஆளுநர் உரையில் இல்லை.. இந்த ஆளுநர் உரையை கண்டிக்கிறோம்.. திமுக அரசு கொடுத்த ஆளுநர் உரையை ஆளுநர் ஒருபோதும் வாசித்தது இல்லை.. ஆனால் இன்றைய ஆளுநர் தவெக அரசின் உரையை முழுமையாக வாசிக்கிறார்.. பாஜகவும் – தவெகவும் ஒரு புரிதலுக்கு வந்துள்ளனர்..” என்று தெரிவித்தார்.

Read More : “38 நாட்களில் 126 பாலியல் குற்றங்கள்.. சிங்கப்பெண் சிறப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை..” இபிஎஸ் விளாசல்..!

RUPA

Next Post

ஒரே சார்ஜில் 170 கி.மீ பயணம்.. மாதம் ரூ.3,000 சேமிக்கலாம்..! அசத்தலான எலக்ட்ரிக் பைக்..!

Thu Jun 18 , 2026
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அது சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. எரிபொருளுக்காகவே மாதந்தோறும் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. மோசமான நிதிச் சூழலால் சிரமப்படும் சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு பெரிய சுமையாகும். இதன் காரணமாக, சமீப காலங்களில் அதிகமான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் (EV) ஆர்வம் காட்டி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மீதான […]
ola electric

You May Like