பாரத மாதா மதச் சின்னமா?. இதனால் சட்டம் ஒழுங்குக்கு என்ன அச்சுறுத்தல்?. உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

Bharat Mata kerala high court 11zon

பாரத மாதாவை மதச் சின்னம் என்று அழைத்ததற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம். கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்த நிகழ்வுகள் அரங்கேறின.

அமைச்சரவை கூட்டத்திலும் பாரதமாதா படம் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே கேரளா பல்கலைகழகத்தில் உள்ள செனட் ஹாலில் ஸ்ரீபத்மநாபா சேவாசமிதி சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி எமெர்ஜென்சி-யை எதிர்த்து போராடிய போராளிகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக 65,000 ரூபாய் சேவா சமிதி சார்பில் செலுத்தப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி மேடையில் பாரதமாதா படம் வைக்கப்பட்டிருந்தது. பல்கலைகழக விதிப்படி மதம் சம்பந்தமான நிகழ்சிகளோ, சொற்பொழிவுகளோ செனட் அரங்கத்தில் நடத்தக்கூடாது என்பதால் பாரதமாதா படத்தை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் படத்தை அகற்ற மறுத்துவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கவர்னருக்கு போனில் தகவல் தெரிவித்தார் ரெஜிஸ்டார். அதுபற்றி கவலைப்படாமல் கவர்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, கவர்னர் மேடையில் இருந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாக ரெஜிஸ்டார் அலுவலகத்தில் இருந்து இ மெயில் மூலம் கவர்னர் மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது கவர்னரை அவமதிக்கும் செயல் எனவும். வெளியில் இருந்து ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக சட்டத்துக்கு புறம்பாக ரெஜிஸ்டார் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி துணை வேந்தர் விசாரணை நடத்தினார். ரெஜிஸ்டார் கூறியதால்தான் இ மெயில் அனுப்பியதாக பல்கலைகழக பி.ஆர்.ஓ தெரிவித்தார். மதம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்தான் நடத்தக்கூடாது என பல்கலைகழக விதியில் உள்ளது. அப்படியானால் பாரதமாதா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என ரெஜிஸ்டாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கேரளா பல்கலைகழக ரெஜிஸ்டார் அனில் குமார் நேற்று முன் தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்டுக்கான உத்தரவை கேரளா பல்கலைகழக துணை வேந்தர் மோகன் குந்நும்மல் பிறப்பித்தார். சீனியர் ஜாயிண்ட் ரெஜிஸ்டார் ஹரிகுமார் பொறுப்பு ரெஜிஸ்டாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதிவாளர் கே.எஸ். அனில் குமார் தனது இடைநீக்கத்தை எதிர்த்துகேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். நாகரேஷ், பதிவாளர் அனில் குமாரின் இடைநீக்கத்தை நிறுத்தக் கோரிய இடைக்கால மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். பாரத மாதா எப்படி ஒரு மத சின்னம் என்று மனுதாரரிடம் கேட்டது? அதைக் காண்பிப்பதன் மூலம் கேரளாவில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படப் போகிறது? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஓவியக் காட்சி தொடர்பாக சிபிஐ(எம்) மற்றும் பாஜகவின் மாணவர் பிரிவுகள், இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஆகியவற்றுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். செனட் மண்டபத்தில் ஒரு மதச் சின்னம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அத்தகைய சூழ்நிலையில் நிகழ்வை ரத்து செய்ய முடியும் என்றும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி தன்னிடம் கூறியதாக அனில் குமார் கூறினார். அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே துணைவேந்தர் பதிவாளரை இடைநீக்கம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

சிண்டிகேட் அமர்வில் இல்லாதபோது துணைவேந்தர் உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும், இடைநீக்க உத்தரவை செனட் அங்கீகரிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தபோது கூட இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Readmore: இன்றுதான் ஜூலை 5!. பாபா வங்கா சொன்ன மாதிரியே நடந்துருச்சு!. நிலத்தடியில் அதிர்வை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

KOKILA

Next Post

டிரினிடாட்டில் பிரதமர் மோடிக்கு "பாரம்பரிய சோஹாரி" இலையில் விருந்து!. இதற்கும் இந்தியாவுக்கும் இப்படியொரு தொடர்பா?

Sat Jul 5 , 2025
ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இரவு உணவின் போது சோஹாரி என்ற சிறப்பு பாரம்பரிய இலையில் உணவு பரிமாறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோ சுற்றுப்பயணத்தில் உள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 4, 2025) அங்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ​​சோஹாரி என்ற சிறப்பு இலையில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும், இந்த […]
PM Modi Sohari Leaf 11zon

You May Like