தவெக அமைச்சரவையில் சௌமியா அன்புமணி இடம்பெறுவது உறுதியாகி விட்டதா? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!

Vijay Sowmiya 2026

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீரை பற்றி நாளை ஆய்வு செய்ய உள்ளோம். அச்சின் கரையோரத்தில் புதிதாக எந்த ஒரு கட்டுமான பணிகளும் கட்டப்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துரைகளை பராமரிப்பு செய்தால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக இருக்கும். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க நல்ல ஒரு திட்டம் இருந்தால் அதற்கு விரைவாகநிதி ஒதுக்க வேண்டும் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 80 லட்சம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். 54 லட்சம் பேர் குடி நோயாளிகளாக மாறி உள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களில் 27 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் மதுவை ஒழிக்க மது இல்லா தமிழகம் என்ற இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம். விவசாயிகள், ஏழைகள் வீட்டில் இருக்கக்கூடிய பணம் டாஸ்மாக்கில் இருப்பது என்பது வேதனையாக இருக்கிறது என்றார்.

மேலும், ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கக் கூடியது. சௌமியா அன்புமணி அமைச்சரவையில் இடம் பெறுவார் என பேசப்படுவது வதந்தி என்று தெரிவித்தார்.

Read More : கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி! தின்னர் ஊற்றி தீவைத்த கணவன்! தருமபுரியில் குலைநடுங்க வைத்த சம்பவம்!

Next Post

அக்.20 முதல் வடகிழக்கு பருவமழை ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் வழக்கத்தை விட அதீத கனமழை கொட்டித் தீர்க்கும்!

Sat Oct 3 , 2026
தென்மேற்கு பருவமழை படிப்படியாக விடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘எல் நினோ’ வானிலை மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதீத கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை […]
Heavy Rain 2026

You May Like