அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு கொரோனாவா..? ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு கொரோனா பரிசோதனை, தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 386 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 2,099 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகே எந்த மாதிரியான காய்ச்சல் என்ற விவரம் தெரியவரும்.

CHELLA

Next Post

நிலத்தகராறில் ஏற்பட்ட விபரீதம்…..! விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!

Tue Apr 11 , 2023
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தும்பலம் கேனி பள்ளம்காட்டுகொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் தன்னுடைய மகன்கள் அண்ணாவி (62), முருகேசன் (48), பெரியசாமி(45) உள்ளிட்ட மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுக்க முடிவெடுத்தார். அப்போது முருகேசனுக்கு விவசாய நிலத்தையும், மற்ற இருவருக்கும் நிலத்திற்கு பதிலாக பணத்தையும் கொடுத்து பாகப்பிரிவினை செய்தார். ஆனால் இதில் அண்ணாவி மற்றும் பெரியசாமி உள்ளிட்டோருக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற […]
MURDER 2

You May Like