மத்திய அமைச்சராகிறார் நயினார் நாகேந்திரன்? எல்.முருகனுக்கு மீண்டும் பாஜக தலைவர் பதவி? அரசியலில் பரபரப்பு!

Murugan Nainar 2026

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டில் முழுநேரக் கட்சிப் பணிகளில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்காக, தன்னை எம்பி பதவியில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கும், மாநிலங்களவை தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு எளிய தொழிலாளியின் மகனான தனக்கு மத்திய அமைச்சராகப் பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “தேசம் முதலில், கட்சி அடுத்தது, சுயநலம் கடைசியில்” என்ற கொள்கையின் அடிப்படையில், அடிமட்ட அளவில் தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தீவிரக் களப்பணியாற்றவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நீடித்து வரும் வேளையில், எல். முருகனின் இந்தத் திடீர் வருகை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்குப் பின் தலைவரான நயினார் நாகேந்திரனால் கட்சியை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல முடியவில்லை என்ற விமர்சனங்கள் உள்கட்சிக்குள் இருந்து வருகின்றன. குறிப்பாக, முக்கிய நிர்வாகிகள் விலகியது மற்றும் தென் மாவட்டங்களைத் தாண்டி கட்சியை வலுப்படுத்த முடியாதது டெல்லி தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும் வெறும் 1 இடத்தில் மட்டுமே பாஜக வென்றதால், தலைமை மாற்றம் குறித்த குரல்கள் தீவிரமடைந்துள்ளன. அத்துடன், பொதுவெளியில் நயினார் நாகேந்திரன் பேசிய சில தனிநபர் கருத்துகள் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2020 முதல் 2021 வரை மாநிலத் தலைவராக இருந்து சட்டப்பேரவைக்கு 4 எம்.எல்.ஏ-க்களை அனுப்பிய அனுபவம் எல். முருகனுக்கு உள்ளதால், அவர் மீண்டும் மாநில தலைவராக நியமிக்கப்படுவாரா அல்லது 2029 தேர்தலுக்கான சிறப்புப் பொறுப்பாளராக களமிறக்கப்படுவாரா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. அதேசமயம், நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

Read More : அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணம் இல்லாததால் மின்சாரத்தில் ஊழலா? விளாசிய ஸ்டாலின்!

You May Like