தமிழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை இன்று நாளை (அக்டோபர் 14) வெளியாகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த அட்டவணையை வெளியிடுகிறார்.
10ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மொழிப் பாடங்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து முதன்மை மற்றும் தொழிற்கல்விப் பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
அமைச்சர் தேர்வு அட்டவணையை வெளியிட்டதும், பாடவாரியான தேர்வு தேதிகள், செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வுத் தயாரிப்புகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு ஏதுவாக இந்த அட்டவணை முன்கூட்டியே அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read More : அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணம் இல்லாததால் மின்சாரத்தில் ஊழலா? விளாசிய ஸ்டாலின்!



