நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், திருச்சி சீதா ஆகிய மருத்துவமனைகள் இனி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதற்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்னி மற்றும் மனித உறுப்புகளைத் திருடுகிறார்கள் என்று பேசி வருகின்றனர். இது திருடா அல்லது முறைகேடா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நடந்தது ‘கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு’ என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்கிறார். ஒருவரின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா?
இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்று வரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன், கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா..?