திண்டுக்கல் மாவட்ட திமுக மூத்த நிர்வாகி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 ம் ஆண்டு தேர்தலுக்கு தற்போதே களப்பணிகளை தொடங்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் சரிவர பணி செய்யாத மாவட்ட நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் எனவும் பதவிகளை காப்பாற்ற சரிவர பொறுப்புகளை செய்வது அவசியம் எனவும் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டனர். குறிப்பாக தர்மபுரியில் மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட திமுக மூத்த நிர்வாகி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தொப்பம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் க.தங்கராஜ், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறுவதால் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதில் அப்பதவியில் பி.சி.தங்கம் நியமிக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.
Read more: அடுத்த சோகம்.. யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து..!! 6 பேர் பலி..!