2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் கூட்டணி வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. அதன்பின்னர் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தையில் நடத்திக் கொண்டிருந்த போதே இடையில் தட்டி தூக்கி திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதே போல் இனி நடந்து விடக்கூடாது என உஷாரான செங்கோட்டையன், சென்னை, டெல்டா மற்றும் கொங்கு வை சேர்ந்த மூன்று முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைய உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
Read more: Weight Loss: குளிர் காலத்தில் உடல் எடையைக் குறைப்பது கடினமா..? இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!



