தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது. எனினும் தன் மீதான குற்றச்சாடுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றூ கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும் என்று அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், 03.12.2025 அன்று அமலாக்கத்துறை தமிழக “பொறுப்பு” டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல், “டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், “Party Fund” (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது” பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்! “தியாகி” பாலாஜிக்காக வந்த “தொட்டுப் பார், சீண்டிப் பார்” வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்! இன்னும் இரண்டே மாதங்கள் தான்… அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!” என்று தெரிவித்துள்ளது..
Read More : எகிப்து முதல் கீழடி வரை.. உலக தாய்மொழி தினம்.. தமிழ் மொழி குறித்து முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் பெருமிதம்..!



