ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கதுவா மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியதாவது, மச்சைல் மாதா கோவில் அருகே நடந்த இந்த மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் தெரிவித்த நிலையில், வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைமை செயலாளர் அடல் துல்லூ, கிஷ்த்வார் மேகவெடிப்பில் 61 பேர் பலியாகி உள்ளனர்.சி.ஐ.எஸ்.எப்., ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸ், சி.ஆர்.பி.எப்., பி.ஆர்.ஓ., இந்திய ராணுவம் மற்றும் என்.எச்.பி.சி. உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு பகலாக நடந்த மீட்பு பணியில் இதுவரை 116 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்த வெள்ளத்தில், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள், பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது என்றார்.