#Breaking: ஜனவரி-9.., தமிழக சபாநாயகர் வெளியிட்டக் முக்கிய தகவல்

2023 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 9ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்குகிவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மற்றம் செய்யப்பட்டது, மேலும் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுகாவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக கருதப்படும், குடும்ப தலைவிக்கு மாதம் 1000ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsnation_Admin

Next Post

தென்னிந்திய நடிகைகளுக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை - ஜெயசுதா குற்றச்சாட்டு

Mon Dec 26 , 2022
80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா.  இவர் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக இருந்து பின் அரசியல் வாதியாக மாறிய ஜெயசுதா தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு இந்திய அரசாங்கம்  உரிய அங்கிகாரத்தை வழங்குவதில்லை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால் திரையுலகில் […]
jaya sudha 3 1

You May Like