காமராஜர் பிறந்தநாள் விழா… தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ஒரு நாள் மட்டும்…! தமிழக அரசு உத்தரவு..!

tn school 2025

காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்படும். இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்ததுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும்.

கலை, இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் மாணவர்களை நன்கு ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி குழு ஆகியவை சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். புரவலர்களையும் அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் பெறும் நிதியை கொண்டு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறைகள், ஆய்வகம், நூலக மேம்பாடு, சுற்றுச்சுவர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதுதவிர, இந்த ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி,பரிசுகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read more: இன்று உலக மக்கள் தொகை தினம்!. 2030க்குள் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்!. இந்த மாநிலம்தான் முதலிடம்!.

Vignesh

Next Post

அப்படி போடு!. விவாகரத்து வழக்கில் மனைவியின் ரகசிய அழைப்பு பதிவுகளை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்!. உச்சநீதிமன்றம் அதிரடி!

Tue Jul 15 , 2025
விவாகரத்து வழக்குகளில் மனைவியின் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளை ஆதாரமாக பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றம், தனது மனைவி தனக்கு இழைத்த கொடுமைக்கு ஆதாரமாக ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களைப் பயன்படுத்த ஒரு கணவருக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, அந்தப் பெண் உயர் நீதிமன்றத்தை அணுகினார், அந்த பதிவுகள் தனது அனுமதியின்றி செய்யப்பட்டதாகவும், […]
secret call recordings supreme court 11zon

You May Like