சொந்த மகனையே கூலிப்படையை வைத்து கொலை செய்த தந்தை! அதிர்ச்சியில் காவல்துறையினர் காரணம் என்ன?

பொதுவாக பெரியவர்கள் கிராமத்தில் ஒரு வாக்கியத்தை சொல்வார்கள், கோபம் குடியை கெடுக்கும் என்று ஒரு வாசகம் உண்டு. ஒரு மனிதனுக்கு தன்னை மீறிய கோபம் வந்து விட்டால் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்ற நிதானத்தில் அந்த மனிதன் இருப்பதில்லை.ஆனால் அந்த கொடூர கோபத்தின் உச்சியில் இருக்கும் அந்த நபர் பல விபரீதங்களை நிகழ்த்தி விட்டு பின்பு அமைதியாகி கோபம் குறைந்த பின்பு, நாம் ஏன் இந்த செயலை செய்தோம் என்று யோசித்து வருத்தம் கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.


அப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. அதாவது, பெற்ற மகனையே கூலிப்படையை வைத்து கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

அந்த இளைஞரை கொலை செய்த கூலிப்படையை சார்ந்த 6 பேரையும் ஹுப்ளி காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக பேசிய காவல்துறை ஆணையர் லாபுராம் நகைக்கடை வியாபாரியாக இருந்த அகில்(26) என்ற இளைஞர் கடந்த 1ம் தேதி கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் டிசம்பர் மாதம் 3ம் தேதி அவரை காணவில்லை என்று அவருடைய உறவினர் ஒருவர் புகார் வழங்கியிருந்தார்.

அந்த புகாரினடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அகிலின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணை நடத்தி இருக்கின்றன .அந்த விசாரணையில் கூலிப்படையைச் சேர்ந்த 6 பேரை வைத்து மகனை தானே தான் கொலை செய்ததாக அகிலின் தந்தை ஒரு அதிர்ச்சிக்குரிய வாக்குமூலத்தை வழங்கி உள்ளார். சொந்த பிரச்சினை தான் இந்த கொடூரமான கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள அகிலின் தந்தை பாரத் மகாஜன் சேட் கூலிப் படையினரிடம் அகிலை சிக்கவைத்து, அதன் பிறகு வீட்டிற்கு தனியாக திரும்பியுள்ளார். கூலிப்படையை சார்ந்த மற்ற 6 பேரும் அகிலை கொலை செய்து ஹுப்ளியில் இருக்கின்ற தேவகுப்பா என்ற இடத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து அவருடைய உடலை எரித்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனம் தடையறவியல் பிரிவு நிபுணர்கள் கொலை நடைபெற்ற இடத்திற்கு சென்று செய்த தீவிர சோதனையின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலமாக அகில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடைய தந்தை மற்றும் கூலிபடையினரை தவிர்த்து வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் வேலையில் காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் லாபுராம் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், பெற்ற மகனை தந்தையே கூலிப்படையை வைத்து கொலை செய்திருக்கும் சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பீச் ஓரம் பிகினி உடை..!! கவர்ச்சியில் கலக்கும் ஜான்வி கபூர்..!! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!!

Fri Dec 9 , 2022
பீச் ஓரம் அமைந்துள்ள ரெசார்ட்டில் இருந்து கடல் அழகை ரசித்தபடி பிகினி உடையில் ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை தொடங்கி தற்போது ரிலீசுக்காக காத்திருக்கும் துணிவு வரை வரிசையாக 3 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர். இவரும் பாலிவுட்டில் பிஸியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் அடுத்தடுத்து […]
பீச் ஓரம் பிகினி உடை..!! கவர்ச்சியில் கலக்கும் ஜான்வி கபூர்..!! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!!

You May Like