கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தேவாபூர் அருகே ஒரு கார் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து கலபுரகி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், ராய்ச்சூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், கார் தீப்பிடித்து சில நிமிடங்களிலேயே முற்றிலுமாக எரிந்தது. இதனால் காரில் பயணித்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
தீயணைப்பு மற்றும் அவசரகால சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், ஆனால் காரில் இருந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த பயணிகள் ஜன்னல் வழியாகக் குதித்து உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காவல்துறையினரும் விபத்து நடந்த இடத்திற்கு வந்து, போக்குவரத்துக்காக அப்பகுதியைச் சீரமைக்கத் தொடங்கினர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் காலை துண்டாக வெட்டிய கொடூர கணவன்..! என்ன நடந்தது..?



