கரூர் தான் நம்பர்-1.. இரவோடு இரவாக கட்சி மாறிய அதிமுக, பாஜகவினர்..!! செந்தில் பாலாஜி பலே ப்ளான்

senthil balji

வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி கரூரில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார்.


அந்த வகையில் மதிமுக மாவட்ட நிர்வாகி ரவி, பாஜக பூத் கமிட்டி பொறுபாளர் சண்முகம் , அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடந்த வாரங்களில் திமுகவில் இணைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்க திமுக தலைமை தயக்கம்காட்டி வந்தது.

இந்தச் சூழலில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோரை திமுக சமீபத்தில் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது.

தொடர்ந்து ஜூலை 6 ஆம் தேதியான இன்று கரூர் பஞ்சமா தேவி பகுதியில் அதிமுக கிளை அவைத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட அதிமுக, தவெகவினர் பலரும் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையில் மாற்று கட்சியினரை திமுகவுக்கு இழுக்கும் செந்தில் பாலாஜியின் ஆட்டம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது.

குறிப்பாக மாற்றுக்கட்சியினர் மற்றும் புதியவர்களை இணைப்பதில் கரூர் தான் நம்பர்-1 ஆக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக, பாஜக வார்டு கவுன்சிலர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Read more: 4.50 லட்சம் விவசாயிகள் விண்ணப்பம்… ஒருவருக்கு கூட திமுக அரசு மின் இணைப்பு வழங்கவில்லை…!

English Summary

Karur is number-1.. AIADMK, BJP who changed parties overnight..!!

Next Post

ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார்..? வெளியான பரபர தகவல்..

Wed Jul 16 , 2025
Who installed the wiretapping device in Ramadoss's house? Various information has been released..
ramadoss

You May Like