Delhi CM: டெல்லி முதல்வராவதற்கு தயாராகி வரும் கெஜ்ரிவால் மனைவி!… மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பகீர்!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது..?

Delhi CM: பீகாரில் ராப்ரி தேவி முதலமைச்சர் ஆனது போல், கெஜ்ரிவால் கைதுக்கு பின் அவரது மனைவி சுனிதாவும் டெல்லிக்கு முதலமைச்சர் ஆக முயற்சிக்கிறார் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாஜகவின் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலையும், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவியையும் ஒப்பிட்டுள்ளார்.

நீங்கள் மேடம் என்று குறிப்பிடுபவர் பீகாரில் ராப்ரி தேவி செய்ததை போல், டெல்லியில் பதவியை வகிக்க தயாராகி வருகிறார். 80 வயதான மூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் ஊழல் கட்சிக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி, தற்போது அதே கட்சியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணி வைத்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்குவதாகக் கூறி அரசியலுக்கு வந்தார். ஆனால் இப்போது யாருடன் கூட்டணி வைத்துள்ளார்? அவர் கூட்டணி வைத்திருக்கும் கட்சி மிகவும் ஊழல் மிக்க கட்சியாக உள்ளது. கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது அதன் விளைவை சந்திக்கிறார். அவர் விட்டுவிட வேண்டும். அவருக்கான நேரம் குறைந்து விட்டது” என்றார்.

Readmore: Election: வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்!… இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 5 மணிக்கு வெளியீடு!

Kokila

Next Post

OPS | எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்..!! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மீண்டும் பரபரப்பு புகார்..!!

Sat Mar 30 , 2024
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு […]

You May Like