மதுபோதையில் தந்தை செய்த கொடூரம்! 2 வயது பெண் குழந்தை பரிதாப பலி – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

crime scene investigation

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் மதுபோதையில் இருந்த தந்தை, தனது 2 வயது பெண் குழந்தையை தரையில் தூக்கி வீசியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பரிதோஷ் மண்டல் (27) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோண்ட் வாலி. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. வேலை காரணமாக இந்த குடும்பத்தினர் கேரள மாநிலம் மாவேலிக்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

மதுபோதையில் நடந்த கொடூர சம்பவம்

சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில் பரிதோஷ் மண்டல் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது மனைவியின் மடியில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குழந்தையை தூக்கிச் சென்ற பரிதோஷ் மண்டல், திடீரென குழந்தையை தரையில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை அலறியதுடன் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல்

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தையின் தந்தையே மதுபோதையில் குழந்தையை தரையில் அடித்ததாக தெரியவந்தது.

தந்தையை கைது செய்த போலீசார்

இதனைத் தொடர்ந்து பரிதோஷ் மண்டல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 2 வயது பிஞ்சு குழந்தை தந்தையின் செயலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

maha

Next Post

காவிரி நீர் விவகாரத்தில் புதிய சர்ச்சை..! “கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லை” – பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தேவகவுடா!

Wed Nov 18 , 2026
பெங்களூரு: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கர்நாடகாவின் தண்ணீர் தேவைகள் குறித்து முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மழைப்பொழிவு குறைவால் நீர்த்தேக்கங்களில் பாதிப்பு! […]
modi j1

You May Like