2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும், தற்போதே அரசியல் கணக்குகளும், கட்சி தாவல்களும் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தைகளை தீவிரமாக்கியுள்ளன.
இதனிடையே முன்னாள் திமுக மூத்த தலைவர் KS ராதாகிருஷ்ணன் நேற்று பாஜகவில் இணைந்தார். அந்த வகையில் இன்னும் சிலர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுகவின் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக எல்.முருகன் கூறியிருந்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் இணைப்பு விழா நடக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அசுர கூட்டணி பலத்துடன் இருக்கும் திமுக, அதிமுக கட்சி மற்றும் கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் பணிகளை தொடங்கி இருக்கிறது. முக்கியமாக அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் அதிமுகவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழ ஆரம்பித்தன. முதல் முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணி என விமர்சித்ததோடு சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என கூறி இருந்தார்.
அவர் அதிருப்தியில் இருப்பது தெரியவந்த நிலையில் திமுக தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான் முன்னாள் எம்பி மைத்திரேயன் உள்ளிட்டோர் திமுக கட்சியில் இணைந்தனர். தேர்தல் நெருக்கும் நேரத்தில் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவுவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Read more: “வேலையில்லாமல் இருக்கும் கணவரை இழிவுப்படுத்தி திட்டுவது கொடுமைக்கு சமம்”!. உயர் நீதிமன்றம் கருத்து!