கள்ளக்காதலனை கொன்று மூளையை கிணற்றில் வீசிய கோகிலா.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

affair murder 1

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இப்ராகிம் குடும்பத்தோடு காட்பாடி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். கோகிலாவுக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சுனில் என்ற 25 வயது இளைஞனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.


இந்த விஷயம் இப்ராஹிமுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் கோகிலா கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்ததால் குழந்தைகளை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு மன்னார்குடிக்கு சென்று விட்டார். இதன் பிறகு கோகிலாவுக்கும் சுனிலுக்கும் ஒன்றாக ஊர் சுற்றி ஒரே வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதனிடையே, கோகிலாவுக்கு, மணி, சதீஷ் என்ற 2 ஆண் நண்பர்களுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனால் சுனில் கோகிலாவை கண்டித்துள்ளார்.. அடிக்கடி மது அருந்திவிட்டு, கோகிலாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு போன கோகிலா சுனிலை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

உடனே நண்பர்கள் மணி, சதீஷ் மற்றும் கோகிலாவின் அப்பா முத்து ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். சுனிலுக்கு போன் செய்து, நைசாக பேசி வீட்டுக்கு கோகிலா வரவழைத்தார். வீட்டுக்கு வந்த சுனிலை, கோகிலாவின் அப்பா முத்து, மணி, சதீஷ் என 3 பேரும் சேர்ந்து தலையில் கத்தியால் வெட்டினார்கள்.. இரும்பு கம்பி, கட்டையால் தாக்கினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுனில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுனில் மூளையை மட்டும் வெளியே எடுத்து அருகிலுள்ள கிணற்றில் வீசினார்கள்.. சுனிலின் சடலத்தை அங்குள்ள கீரை தோட்டத்தில் வீசிவிட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். 2020ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி தலைமையில் நடந்து வந்தது.. இதில் கடந்த வருடம் கோகிலாவின் அப்பா முத்து இறந்துவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோகிலா, மணிகண்டன் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.

Read more: மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான காலை உணவு என்ன தெரியுமா..?

English Summary

Kokila killed a blackmailer and threw his brain into a well.. The court gave a dramatic verdict..!!

Next Post

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..? ஆட்சியர் அறிவிப்பு..!!

Sun Nov 30 , 2025
நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவின் வருடாந்திர கந்தூரி விழா தொடங்குவதையொட்டி, அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கந்தூரி விழாவைக் கருத்தில் கொண்டு, வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விழாவிற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் நாகூரில் கூடுவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக, ரயில்வே […]
school student

You May Like