மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோ! 45 கிலோ மீட்டர்! எந்தெந்த ரூட் தெரியுமா..?

CM Vijay 2026 4

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று (அக். 2) தொகுதி முழுவதும் சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.


கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இத்தொகுதி காலியானது. இதையடுத்து வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இக்களத்தில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதால் தொகுதி முழுவதும் தேர்தல் ஜூரம் எகிறியுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 25 அன்று அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய், அதன் தொடர்ச்சியாக தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் மக்களை நேரடியாகச் சந்திக்கும் வகையில் இந்த மாபெரும் ரோடு ஷோவை இன்று மேற்கொள்கிறார்.

அதன்படி, இன்று காலை மேல்மருவத்தூரில் தொடங்கும் முதல்வரின் ரோடு ஷோ சோத்துப்பாக்கம், பக்கம், கீழ்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு, மதுராந்தகம் நகரம், கருங்குழி வழியாகப் படாளம் பகுதியில் நிறைவடைகிறது. முதலமைச்சரின் வாகனப் பேரணியை முன்னிட்டு, அவர் பயணிக்கும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்கள் மற்றும் செடிகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுச் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் முக்கிய சந்திப்புகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு மதுராந்தகம் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுராந்தகம் பிரசாரத்தை முடிக்கும் முதல்வர் விஜய், அடுத்தகட்டமாக வரும் அக்டோபர் 4ஆம் தேதி தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் இதேபோன்ற பிரம்மாண்ட ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார்.

Read More : MLA பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா..!! 2ம் இடம் பிடித்தவர் வெற்றியா? இடியை இறக்கிய ஐகோர்ட்..!!

Next Post

டபுள் ஜாக்பாட்..!! ரூ.2 லட்சம் போட்டா ரூ.4 லட்சம்..!! போஸ்ட் ஆபீஸின் இந்த ஸ்கீம் பற்றி தெரியுமா..?

Fri Oct 2 , 2026
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அபாயங்கள் ஏதுமின்றி, உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பாகவும் நிலையான லாபத்துடனும் பெருக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு அஞ்சலகச் சிறுசேமிப்பு திட்டங்கள் எப்போதுமே மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் முதலீட்டுக்கு நூறு சதவீத உத்தரவாதம் கிடைக்கும் அதேவேளையில், பணத்தை இரட்டிப்பாக்கும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) மற்றும் நிலையான வருமானம் தரும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) […]
w 1280imgid 01jw7v6pb6rnyebgvtfc6fwzj6imgname tamil news 48 1748315101542

You May Like