குஷி..! புதிதாக 29 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம்…! 12-ம் தேதி தொடக்க விழா…!

1000 2025 2

மகளிர் உரிமை தொகை பெற புதிதாக விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் செய்தால் போதும் என அமைச்சர் சக்ரபாணி அறிவிப்பு.


2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமை திட்டத்தில் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்தவகையில் அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15, 2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான மனுக்கள் ஏற்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்

இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றால் தகுதியான நபர்கள் அப்பகுதி கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 29 லட்சம் மகளிர் உரிமைத் தொகை காண விண்ணப்பங்கள் வந்துள்ளது. டிசம்பர் 12 சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதில் தகுதி இருந்தும் கிடைக்கவில்லை என்றால் கோட்டாட்சியருக்கு மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

Vignesh

Next Post

துளசி நல்லது தான்.. ஆனால் நேரடியாக மென்று சாப்பிட்டால் ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்..

Sun Dec 7 , 2025
Why it is advised to never chew on Tulsi leaves
tulsi

You May Like