சுற்றுலா தலத்தில் பயங்கர தீவிபத்து!. சொகுசு விடுதி எரிந்ததில் 10 பேர் பரிதாப பலி; பலர் மாயம்!. பகீர் வீடியோ!.

Bangladesh fire 30kb

வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற காக்ஸ் பஜார் (Cox’s Bazar) கடற்கரை சுற்றுலாத் தலத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், விடுதியில் இருந்த பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.


காக்ஸ் பஜாரின் மரினா டிரைவ் பகுதியில் உள்ள இனானி – படுவார்டெக் கடற்கரை அருகே அமைந்துள்ள ‘டப் டப் ரெஸ்டோ அண்ட் ரிசார்ட்’ (TUPTUP Resto and Resort) எனும் உணவகத்துடன் கூடிய விடுதியில், சனிக்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. மூங்கில் மற்றும் மரங்களால் கட்டப்பட்டிருந்த 3 அடுக்கு விடுதி கட்டடம் என்பதால், தீ மின்னல் வேகத்தில் பரவி விடுதி முழுவதையும் எரித்து சாம்பலாக்கியது.

இச்சம்பவத்தில் இதுவரை 10 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உகியா காவல் நிலைய அதிகாரி முகம்மது அதிக்குர் ரஹ்மான் மற்றும் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தல்ஹா பின் ஜாசிம் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் விடுதியில் சுமார் 30 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 4 முதல் 5 பேர் மட்டுமே உடனடியாகத் தப்பித்து வெளியேறியுள்ளனர். மற்றவர்களின் நிலைமை என்னவென்று தெரியாததால், மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காயமடைந்த 9 பேர் உடனடியாக காக்ஸ் பஜார் சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேருக்கு 5 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பியதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சடலங்களை அடையாளம் காண டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தீவிபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. விடுதியின் சமையலறையில் ஏற்பட்ட மின்கசிவு அல்லது காஸ் கசிவு காரணமாகத் தீ பரவியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், தீயணைப்புத் துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

பிஸ்கட்டில் தவிடு; பாலில் சலவைத்தூள்?. 3 நிறுவனங்கள் மீது FSSAI கடும் நடவடிக்கை!.

Sat Oct 17 , 2026
அன்றாட உணவுப் பொருட்களின் தரம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. பால், பிஸ்கட் மற்றும் உலர் திராட்சை தொடர்பான ஏராளமான சிக்கல்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். டோட்லா டெய்ரி, பிரியாகோல்ட் பிஸ்கட் தயாரிக்கும் சூர்யா ஃபுட் & அக்ரோ மற்றும் யூயர் ஆர்கானிக் ஃபுட்ஸ் ஆகியவை அடங்கும். விசாரணையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைத் தொடர்ந்து, இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உணவு வணிக நிறுவனங்களுக்கும் […]
biscuits

You May Like