ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநரான சோஹன் எம். ராய் தனது வயிறு முழங்கும் (growling) சத்தத்தை கண்டறிந்து தானாகவே உணவு ஆர்டர் செய்யும் ஒரு AI சாதனத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ நான் பசியாக இருக்கும்போது அதை புரிந்துகொண்டு தானாகவே Zomato-வில் உணவு ஆர்டர் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.. இது பெல்ட்டில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சாதனம் எப்படி வேலை செய்கிறது?
அவர் உருவாக்கிய சாதனத்திற்கு “MOM (Meal Ordering Module)” என்று பெயரிட்டுள்ளார். இது, வயிறு முழங்கும் சத்தத்தை கண்டறிகிறது, அந்த சத்தம் உண்மையில் பசியால் ஏற்படுகிறதா என்பதை AI மூலம் பரிசோதிக்கிறது, பசி இருப்பதாக AI உறுதிப்படுத்தினால் தானாகவே உணவு ஆர்டர் செய்கிறது.
எந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டன?
சாதனத்தை உருவாக்க அவர் பயன்படுத்தியவை: தனது சகோதரியின் ஸ்டெத்தஸ்கோப் (வயிறு சத்தத்தை உணர), பிற ஹார்ட்வேர் கூறுகள், பசி நிலையை மதிப்பிட Claude AI. AI மூலம் அவர் எவ்வளவு பசியுடன் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு ஆர்டர் செய்யும் வசதி இதில் உள்ளது.
சோஹன் ராய் உருவாக்கிய AI சாதனத்தை பற்றி சமூக வலைதளங்களில் என்ன கூறினர்?
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கருத்துக்கள் பதிவுசெய்தனர்: பயனர் ஒருவர் “ இதை எப்படி டெஸ்ட் செய்தீர்கள்?”என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு ராய் “ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் உட்கார வேண்டி வந்தது.” என்று பதிலளித்துள்ளார்..
இன்னொரு பயனர் “ வயிறு முழங்குவது என்றால் பசிதான் என்பதில்லை. இருந்தாலும் நல்ல வேலை.” என்று பதிவிட்டார்.. ராய் “எனக்கு பசி இருக்கும்போது வயிறு முழங்கும். எனவே எனக்கு இது வேலை செய்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
மூன்றாவது ஒருவர் “இது தேவையற்ற கண்டுபிடிப்புகளில் இடம் பெற வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.. மற்றொரு பயனர் “இந்த சாதனம் இன்னும் சிறியதும் இலகுவானதும் இருந்தால் என் பூனைக்கு கட்டிவைக்கலாம். அது எப்போது பசிக்கிறது என்று தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.”
சோஹன் எம் ராய் யார்?
மங்களூரைச் சேர்ந்த சோஹன் எம் ராய் “zikiguy” என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்துகிறார். இதில் அவர் தொழில்நுட்பத்தை சார்ந்த பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவர் Sahyadri College of Engineering & Management-ல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். பல தொழில்நுட்ப நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்த பிறகு, தனது சொந்த ஸ்டார்ட்அப் ஒன்றை தொடங்கினார். சமூக வலைத்தளங்களுக்காக அவர் தொடர்ந்து தொழில்நுட்ப உள்ளடக்கங்களை உருவாக்குகிறார்.
2023ல் அவர் வைரலான சம்பவம்:
அவர் ஒரு முறை Zomato-வின் டெலிவரி பாய் ஆக சேர்ந்தது போலக் காட்டி, தான் உருவாக்கிய ட்ரோன் மூலம் உணவை விநியோகித்த வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : 1 லிட்டர் கழுதைப் பாலின் விலை ரூ.7000! இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?



