நேபாள பெருவெள்ளம்!. 6,000 பேரை காணவில்லை!. 4 வாரங்களாக தொடரும் தேடுதல் வேட்டை!.

6e50ad3680aa214ff2c257f4dc1ddbc558e8bb689c77d2bc796af82d8da68b48 2

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, 4 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் காணாமல் போன சுமார் 6,000 பேரைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பேரிடரில் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் உருவான இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, நாட்டின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள கிராமங்களையும் நகரங்களையும் முற்றிலும் சீர்குலைத்தது. இமயமலைப் பகுதியில் இருந்து பாயும் போடேகோஷி (Bhotekoshi) நதியில் கரைபுரண்டு வந்த வெள்ளம் வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடியோடு அடித்துச் சென்றது. எல்லையின் சீனப் பகுதியிலும் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

ரசூவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகள், இடிபாடுகள் குவிந்துள்ள இடங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ரசூவாவில் உள்ள ‘அப்பர் திரிசூலி-1’ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில், சேற்றிலும் கான்கிரீட் கம்பி வலைகளிலும் சிக்கியிருந்த 17 சடலங்களை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. இதற்காக கிரைண்டர்கள் மற்றும் கேஸ் கட்டர்கள் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சுரங்கங்களில் பெருமளவில் இடிபாடுகள் குவிந்துள்ளதால், அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளும் பாலங்களும் பலத்த சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. திரிசூலி வழித்தடத்தில் சேதமடைந்த 12 தொங்கு பாலங்களைச் சீரமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ள அரசு, அக்டோபர் 6-க்குள் அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேலும், முற்றிலுமாகப் பாழடைந்த 33 பாலங்களைப் புதிதாகக் கட்ட டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. பாலங்கள் இல்லாததால் மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மீட்கப்படும் சடலங்களை அடையாளம் காண்பது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் 110 சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீரில் பல நாட்கள் மூழ்கி அடித்து வரப்பட்டதால் உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதால் முகத்தையோ அல்லது ஆடைகளையோ வைத்து அடையாளம் காண முடியவில்லை. இதனால் டிஎன்ஏ (DNA) பரிசோதனை அவசியமாகியுள்ளது. டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு, இதுவரை சுமார் 1,300 சடலங்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

1newsnationuser5

Next Post

காலை வெயிலில் கொஞ்ச நேரம் இருந்தாலே போதும்.. பல நோய்களை விரட்டலாம்!

Mon Sep 21 , 2026
காலை நேரத்தில் சில நிமிடங்கள் இயற்கையான சூரிய ஒளியில் இருப்பது, அன்றாட வாழ்க்கையில் எளிதாக சேர்த்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான பழக்கமாக இருக்கலாம். குறிப்பாக காலை சூரிய ஒளி, உடலின் உயிரியல் கடிகாரத்தை சீராக இயங்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் biological clock சரியாக செயல்படும்போது, எப்போது விழிப்புடன் இருக்க வேண்டும், எப்போது உடல் ஓய்வுக்கும் தூக்கத்துக்கும் தயாராக வேண்டும் என்பதை உடல் இயல்பாக புரிந்துகொள்ளும். இதனால் இரவு நேரத்தில் […]
Sun 2026

You May Like