ஆண்கள் பிங்க் கலர் ஆட்டோ ஓட்ட கூடாது…! மீறினால் ஆட்டோ பறிமுதல்…! தமிழக அரசு அதிரடி…!

pink auto

சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில்; சென்னை மாநகரில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த மார்ச் 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் சிலர் ஓட்டுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சமூக நலத்துறையின் கள ஆய்வுக் குழு கடந்த சில நாட்களாக நடத்திய ஆய்வில், சில ஆண்கள் ஆட்டோ ஓட்டுவது கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, பிங்க் ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிங்க் ஆட்டோ இயக்குபவர்களிடம் இதுகுறித்து பலமுறை கூறப்பட்டுள்ளது.

விதிகளை மீறி, ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக நலத்துறையால் எச்சரிக்கப்பட்டது. எனவே, அறிவுறுத்தல்களை மீறி, பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

எந்தெந்த நாட்களில் வீட்டை துடைக்கக்கூடாது தெரியுமா?. வாஸ்து குறிப்புகள் இதோ!

Sun Nov 9 , 2025
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, வீடு கட்டுவது முதல் பொருட்களை சேமிப்பது வரை அனைத்திலும் மக்கள் வாஸ்துவை கருதுகின்றனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாஸ்து விதிகள் உள்ளன. அதேபோல், வீட்டை துடைப்பதற்கு விதிகள் உள்ளன. ஆம், துடைக்கும் போது ஏற்படும் தவறுகள் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தும். வாஸ்துவின் படி, சூரிய உதயத்திற்குப் பிறகும் நண்பகலுக்கு முன்பும் துடைப்பது மங்களகரமானது. துடைப்பதற்கான வாஸ்து விதிகள் என்ன? எந்த நாட்களில் […]
house mopping

You May Like