அதிரடி…! இனி இது போன்ற காட்சிகள் ஒளிபரப்ப கூடாது…! தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..‌.!

வன்முறைக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து தொலைக்காட்சி மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளில் இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து கண்காணித்ததையடுத்து தொலைக்காட்சிளுக்கு தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

தனிநபர்களின் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த நபர்களின் படங்கள் அல்லது வீடியோக்கள், சுற்றிலும் ரத்தம் சிதறிக் கிடப்பது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரக்கமின்றி அடிக்கப்படுவது, ஆசிரியரால் அடிக்கப்படும் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுவது போன்றவற்றை தொலைக்காட்சி அலைவரிசைகள் மங்கலாகக் காட்டாமலும், முன்னெச்சரிக்கை வாசகங்கள் இல்லாமலும், வட்டமிட்டு பல நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் காட்டுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைப் செய்திப்படுத்தும் விதம் பார்வையாளர்களுக்கு வெறுக்கத்தக்கதாகவும் வேதனையளிப்பதாகவும் உள்ளதை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு, எவ்வித மாற்றங்களும் இல்லாமல் ஒளிபரப்பப்படுவதை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது. முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளின் பார்வையாளர்கள் தன்மையையும், பொது நலனையும் கருத்தில் கொண்டு, அனைத்து தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளும் குற்றம், விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களைக் காட்சிப்படுத்தும்போது விதிகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

Vignesh

Next Post

அதிரடி நடவடிக்கை..‌!கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை...!

Fri Feb 10 , 2023
இடைத் தேர்தல், வாக்குப்பதிவிற்கு முந்தைய பிந்தைய, கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதன்படி, 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A […]
அடேங்கப்பா..!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! 108 வேட்பாளர்களை களமிறக்கும் சங்கம்..!!

You May Like