இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாரா இருக்கணுமா CM saar..? விஜய்யை விளாசிய உதயநிதி..!

cm vijay udhanidhi

கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.. இந்த கடன் தள்ளுபடி மே 1, 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது..


அதன்படி கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால், குறு விவசாயிகளுக்கு முழு 100% தள்ளுபடி செய்யப்படும்.. ரூ.50,0001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும். ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை கடன் இருந்தால் ரூ.30 வரை தள்ளுபடி செய்யப்படும்.. ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும்..

ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.. ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் ரூ.5000 தள்ளுபடி செய்யப்படும்.. என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்..

இந்த நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.

ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.

ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : Breaking : அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!

English Summary

Opposition Leader Udhayanidhi Stalin has criticized the TaVeKa government, alleging that it has deceived farmers in the name of farm loan waivers.

RUPA

Next Post

போலி QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணத்தை இழந்துவிட்டீர்களா..? இதைச் செய்தால், உங்கள் பணம் திரும்பக் கிடைக்கும்..!

Tue May 26 , 2026
Cybersecurity experts warn that there has been an increase in incidents where users transfer money to accounts after scanning fake QR codes.
‘Nature Art And Fashion We Just Described Gauri Khans Trip To Her Favourite Rome 2025 04 25T141607.099 2025 04 03eb7cffbd96d20b7c7228e5e1ef8d07 16x9 1

You May Like