சூரிய மின்கல உற்பத்தியில் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய மின்கல உற்பத்தியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள், உற்பத்தியாளர்களின் செலவைக் குறைப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன. அதன் படி, விண்ணப்பக் கட்டணத்தில் 80% குறைப்பு. ஆய்வுக் கட்டணத்தில் கணிசமானக் குறைப்பு, சில சந்தர்ப்பங்களில் 70% வரை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சாலை ஆய்வுக்கு முன் உற்பத்தியாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற அனுமதிப்பது, விண்ணப்பக் கட்டணத்தில் 90% திரும்பப் பெறுதல், ஏஎல்எல்எம்-இல் சேர்வதற்கான குறைந்தபட்ச தொகுதி செயல்திறன் வரம்புகள் அறிமுகம், யுடிலிட்டி/ கிரிட் ஸ்கேல் பவர் பிளான்ட்ஸ்: 20.00%, கூரை மற்றும் சோலார் உந்தி: 19.50%, சூரிய ஒளி: 19% என தெரிவிக்கப்பட்டுள்ளது