Rain: தமிழகம் & புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…!

rain 1

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி,, வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மலைகளுக்குப் பின்னால் மரண ஓலம்..!! மண்ணுடன் மண்ணாகிய 2,200 உயிர்கள்..!! பூமிக்குள் போன 6,700 வீடுகள்..!! கதிகலங்கிய ஆப்கானிஸ்தான்..!!

Fri Sep 5 , 2025
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத், வியாழக்கிழமை அன்று இந்த எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகள் […]
Afghanistan 2025

You May Like