ED, CBI-ஐ வைத்து மிரட்டும் மோடி அரசு…! காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு…!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால், கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜ்ரிவாலுக்கு பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் விசாரணைக்கு வரத் தயாராக இல்லை. கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இப்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும்.

கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மோடி அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால், கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது. இந்தியாவில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாகத் தான் பிரதமர் மோடி ஆட்சியில் அடக்குமுறைகள் ஏவி விடப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காபந்து சர்க்காராக (CareTaker Government) செயல்பட வேண்டிய மோடி அரசு எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. மோடியின் அடக்குமுறையை I.N.D.I.A கூட்டணி ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Electoral Bonds | தேர்தல் பத்திரம்..!! எந்த கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை..!! இனி ஈசியா பார்க்கலாம்..!!

Fri Mar 22 , 2024
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் அவை சட்டவிரோதமானது என்ற உச்சநீதிமன்றம், இந்த முறையில் நன்கொடை பெறுவதைத் தடை செய்தது. மேலும், 2019 முதல் நன்கொடை விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையமும் இந்த தகவல்களை இணையத்தில் வெளியிட்டது. இருப்பினும், […]

You May Like