மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

School Money 2025

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உஷார்..! Year-End பார்ட்டி சீசன் உங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.. மருத்துவர்கள் வார்னிங்..!

Fri Dec 19 , 2025
ஆண்டு முடிவு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், நண்பர்களை சந்திப்பது, அதிகமாக சாப்பிடுவது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற திட்டங்கள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் இதே நேரத்தில் மருத்துவர்கள் ஒரு கவலைக்கிடமான போக்கு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக, இளம் வயதினரிடையே இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதில் இதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் திடீரென உயர்வு, மேலும் மார்பு வலி போன்ற இதயக்கோளாறு அறிகுறிகள் […]
heart attack

You May Like