தட்டி தூக்கிய CVS…! திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்…!

CV shanmugam 2025

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திமுக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.


மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, 150-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

விறுவிறுப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியைப் பலப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். சமிபத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வகையில், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திமுக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, அதிமுக உறுப்பினர் அட்டையை அதிமுக எம்.பி சி.வி சண்முகம் வழங்கினார்.

Vignesh

Next Post

எப்பவுமே மிகவும் சூடான டீயை குடிக்கிறீங்களா? இந்த புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்! கவனம்!

Sat Oct 18 , 2025
இந்தியாவில் பலர் டீ அல்லது காபி உடன் தான் தங்கள் காலையை தொடங்குகின்றனர்.. காலையில் எழுந்திருக்க அல்லது சோர்வைப் போக்க தேநீர் இந்திய வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சிலர் தேநீர் சூடாகக் குடிக்க விரும்புகிறார்கள். மற்றவர்கள் அதை சற்று சூடு குறைவாக குடிக்க விரும்புகிறார்கள். பலரும் தங்கள் ரசனைக்கேற்ப தேநீர் குடிக்கிறார்கள். ஆனால் அதிக சூடாக தேநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால், […]
hot beverages tea

You May Like